×

பெரியார் சிலை அவமதிப்பைத் தொடர்ந்து கோவை கோயில்கள் முன்பு டயர்கள் எரிப்பு!

கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதனால், கோவையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கோவை நல்லாம்பாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் அங்கு விநாயகர் சிலை முன்பு டயரை வைத்து எரித்துள்ளனர். இதில் கோவில் உடமைகள் எரிந்து நாசமானது. கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில், டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன்
 

கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதனால், கோவையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கோவை நல்லாம்பாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் அங்கு விநாயகர் சிலை முன்பு டயரை வைத்து எரித்துள்ளனர். இதில் கோவில் உடமைகள் எரிந்து நாசமானது.

கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில், டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் வாசல் முன்பும் டயரில் தீவைத்து பற்ற வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது. அதற்கு பதிலடியாகத் தீவைப்பு சம்பவம் நடந்ததா, அல்லது பிரச்னை ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏதாவது அமைப்பினர் தீவைத்துச் சென்றனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள கோவில்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.