×

நல்லாசிரியர் விருது பணத்தை நல்ல வழிக்கே செலவிட்ட திலகவதி!

விருதுப்பணம் 10 ஆயிரத்துடன் தனது சம்பளத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சேர்த்துக்கொடுத்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க உதவி செய்திருக்கிறார் நல்லாசிரியர் திலகவதி. கரூர் தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தன்னார்வலர்களின் உதவியினால்தான் இப்பள்ளியின் மேற்கூரை, தரை, நூலகம், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இப்பள்ளியில்16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரியும் திலகவதி, சொந்த செலவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு உதவிகள் செய்தும், தன்னார்வ
 

விருதுப்பணம் 10 ஆயிரத்துடன் தனது சம்பளத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சேர்த்துக்கொடுத்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க உதவி செய்திருக்கிறார் நல்லாசிரியர் திலகவதி.

கரூர் தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தன்னார்வலர்களின் உதவியினால்தான் இப்பள்ளியின் மேற்கூரை, தரை, நூலகம், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்பள்ளியில்16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரியும் திலகவதி, சொந்த செலவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு உதவிகள் செய்தும், தன்னார்வ அமைப்புகளின் மூலம் நிதி திரட்டி தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளையை மாற்றி உள்ளார். அதனால் சிறந்த ஆசிரியர் என்று பலராலும் பாராட்டப் பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசு அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவிரவித்திருக்கிறது. அந்த நல்லாசிரியர் விருதுப்பணம் 10 ஆயிரத்துடன், தம் சம்பளத்தில் 15 ஆயிரம் சேர்த்து மொத்த 25 ஆயிரமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து, ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு உதவியுள்ளார்.

திலகவதிக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது பொருத்தமானது என்று அப்பகுதி மக்கள் நெகிழ்கிறார்கள்.