×

விசாரணைக் கைதி உயிரிழப்பு விவகாரம் - சிறைக் காவலர்கள் மூவர் கைது

 

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில் சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போது உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு மரணம் அடைந்துள்ளார்.

சபரிவர்மன் உடலில் 19 இடங்கள் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்ததால், காவலர்களை கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவுடை நம்பி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.