உயிருக்கு அச்சுறுத்தல்- தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார்
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் தவெக வேட்பாளர் சினோரா அசோக். புகாரில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23அன்று சேகர்பாபுவுடன் வந்தவர்கள் என்னை தாக்கினர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்றும் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் சினோரா அசோக், “பீகாரை விட மோசமா இங்க ரவுடிசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க சேகர்பாபு.. இப்பயும் சந்தேகம் படும்படியா நபர்கள் அச்சுறுத்தலா ஆட்டோல வந்து போயிட்டு இருக்காங்க.. மருத்துவமனையில் சேகர்பாபுக்காக தப்பான ரிப்போர்ட் எழுதி தராங்க” என்றார்.