×

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் இறந்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள் ! விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளமான சரவண பொய்கையில் மீன்கள் செத்து மிதக்கின்றன . திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது சரவண பொய்கை. இக்கோயில் குளத்திலிருந்து தினமும் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அதேபோல் முருகனுக்கு உகந்த நாளான கார்த்திகை திருவிழா, பங்குனி திருக்கல்யாண பட்டாபிஷேகம் மற்றும் முருகனின் தங்கக் கிரீடத்திற்கு அபிஷேகம் போன்றவை இந்த சரவண பொய்கை நீரினால் செய்யப்படுவதும் விசேஷமான ஒன்றாகும். இந்நிலையில் சரவண பொய்கை
 

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளமான சரவண பொய்கையில் மீன்கள் செத்து மிதக்கின்றன .

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது சரவண பொய்கை. இக்கோயில் குளத்திலிருந்து தினமும் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அதேபோல் முருகனுக்கு உகந்த நாளான கார்த்திகை திருவிழா, பங்குனி திருக்கல்யாண பட்டாபிஷேகம் மற்றும் முருகனின் தங்கக் கிரீடத்திற்கு அபிஷேகம் போன்றவை இந்த சரவண பொய்கை நீரினால் செய்யப்படுவதும் விசேஷமான ஒன்றாகும்.

இந்நிலையில் சரவண பொய்கை குளத்திலிருந்த மீன்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் வைத்து மீன்கள் கொல்லப்பட்டதா?அல்லது ஆக்சிஜன் குறைபாடுகளால் இறந்ததா? எனத் தெரியவில்லை. துர்நாற்றம் வீசுவதால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களை அகற்றப் பக்தர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுதது வருகின்றனர்.