பாஜகவும் காங்கிரஸும் வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் உடலில் இருப்பது ஒரே ஜீன் தான் - சி.வி சண்முகம்..!
பாஜகவும் காங்கிரஸும் வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் உடலில் இருப்பது ஒரே ஜீன் தான். நீட்டை காங்கிரஸ் தான் கொண்டுவந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் தொடர்கிறோம் என பாஜக சொல்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அந்த தீர்ப்பை செல்லாததாக ஆக்க முடியாதா? பாஜகவுக்கு உண்மையிலேயே மனமிருந்தால் எப்போதோ அதை செய்திருப்பார்கள். மாணவர்களை காப்பாற்றி இருப்பார்கள். ஆனால் இதை வைத்து இருவரும் அரசியல் செய்கிறார்கள். மாணவர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள்’’
பாரத பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்ற மத கோட்பாடு இருந்தது. ஆனால், 1984இல் உச்ச நீதிமன்றம் அதை மாற்றியமைத்து ஜீவனாம்சம் வழங்கப்படும் என்ற ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று மாற்றினார்.
அதன்படி, காங்கிரஸ் ஆளும் போதும் சரி, பாஜக ஆளும்போதும் சரி, மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், நீட் கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அது செல்லாது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து மாணவர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் இவர்கள் அரசியல் செய்வதற்காகத்தான் நீட் தேர்வு உதவுகிறது. அப்பாவி மாணவர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் சி.வி சண்முகம்.
அடுத்து பேசிய அதிமுக தளவாய் சுந்தரம், “2013இல் இந்த தீர்ப்பு வந்தது. அப்பொழுது 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீட் வேண்டாம் என்று உத்தரவிட்டனர். ஆனால் ஒரே ஒரு நீதிபதி தான் நீட் தேவை என்று உத்தரவிட்டார். காங்கிரஸ் நினைத்திருந்தால் அப்போதே உச்ச நீதிமன்ற வழக்கை முறியடித்து நீட்டை தடுத்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான் - சி.வி.சண்முகம்
— Polimer News (@polimernews) August 18, 2026
நீட் விவகாரம் தொடர்பாக சி.வி.சண்முகம் கேள்வி..
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் எனக் கூறுகிறார்கள்
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இல்லையா?
நீட் தேர்வை வைத்து காங்கிரஸ்,… pic.twitter.com/0iIYZV7WID