☰
×

சரிந்தது தங்கம் விலை என நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி...மீண்டும் உயரும் தங்கம் விலை..!!

 

தங்கம் விலை கடந்த வாரம் வரை தொடர்ந்து குறைந்து நகை வாடிக்கையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தங்கம் மீது முதலீடு செய்யவும், நகை வாங்கவும் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் வலுவிழப்பு போன்ற பல்வேறு காரணிகளால் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இந்த நிலைமை சரியாக சிறிது காலம் ஆகும் என்றும், அதற்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே செல்ல வாய்ப்பிருப்பதாகவும், நிலைமை சீரடையும்போது சவரன் விலை ரூ. 2 லட்சம் வரை கூட உயரலாம் என்றும் நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், சொற்ப அளவில் நகை வாங்க நினைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்திருக்கிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195க்கு விற்கப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ கிராம் ரூ.220க்கும் ஒரு கிலோ ரூ.2,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக சரிந்த நிலையில், மேலும் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வார இறுதியில் உயரத் தொடங்கிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.80, ரூ.120 மற்றும் ரூ.400 என கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இது சிறிய அளவிலான விலையேற்றமே என்றாலும், தொடர்ச்சியாக உயர்வது தான் அதிர்ச்சியை அளிக்கிறது.