×

இது என்னடா இடியாப்பம் விற்போருக்கு வந்த சோதனை...

 

இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.