×

விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை; சட்டசபையில் இடமில்லை!: விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்!

 

திமுக கூட்டணியில் இருப்பதினால் தான் மாநில கட்சியாக விசிகவிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும்,
விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை அவர்களை மீண்டும் அங்கவே அனுப்பி விடலாம், சட்டசபை நாடாளுமன்றத்தில் கை தட்ட முடியாது விசில் அடிக்க முடியாது மேசை தட்டலாம் என்ற விதி உள்ளது விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி பேருந்து நிறுத்தம் அருகே விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய விசிக திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பெருமித்த ஆதரவு உள்ளதாகவும், விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா 700 கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும்,அன்னியூர் சிவா எம் பியா, எம் எல் ஏ  வா என்ற நிலைமைக்கு மாறிவிட்டார் டெல்லிக்கு சென்று தனது தொகுதி மக்களுக்காக நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்திக்கிறார்.*

அன்னியூர் சிவாவின் பணியையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டினையும் பாராட்டுவதாக தெரிவித்தார். சாதி மதம் பார்த்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பணி செய்யவில்லை அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என  அறிவுறுத்திய அவர் திமுக கூட்டணியில் இருந்து தான் மாநில கட்சியாக விசிகவிற்கு அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், விழுப்புரத்திலும், சிதம்பரத்திலும் இரு எம் பிகள் வெற்றி பெற்ற பிறகு கிடைத்தது இதற்கு திமுக காரணம், திமுக ஸ்டாலின் ஆதரவு இருந்ததால் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறினார். 


விஜய் கட்சிக்கு மற்ற கட்சிக்கும் செல்ல வேண்டுமென கூறினார்கள் கூட்டணிக்கு அழைப்பு வந்தது பதவிக்காகவோ, தொகுதிக்காகவோ  ஆசைபடுபவன் அல்ல,விசிகவிற்கு 8 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த மன உளைச்சலாக இருந்ததாகவும், மதவெறியையும் இஸ்ஸாமியர்களுக்கு எதிராக பேசுபவர்கள் பாஜகவினர் சமத்துவத்தை பற்றி அவர்கள் பேசுவதில்லை அதனால் தான் ஆர் எஸ் எஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை, அவர்களை தூக்கி பிடிப்பவர்களுடன் செல்வதில்லை அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்கவில்லை,கொள்கைக்காகவும் கோட்பாட்டிற்காக தான் திமுகவுட கூட்டணி வைத்துள்ளதாகவும்,தப்பி தவறி கூட அதிமுக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் ஆறு மாதம் கூட முதல்வராக இருக்க முடியாது என தெரிவித்தார். இரட்டை இலைக்கு வாக்களித்தால் அது பாஜகவிற்கு வாக்களிக்கிறது தான் அதிமுகவினருக்கும் அதனை வேண்டுகோளாக வைப்பதாவும் விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை அவர்களை மிண்டும் அங்கவே அனுப்பி விடலாம், சட்டசபை நாடாளுமன்றத்தில் கை தட்ட முடியாது விசில் அடிக்க முடியாது மேசை தட்டலாம் என்ற விதி உள்ளது விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை என தெரிவித்தார்.