☰
×

டெல்டா மாவட்டங்களுக்கு போகிறவர்கள் மறைமலைநகர் போய்தான் பேருந்து ஏறணும்!

 

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களுக்கான பேருந்துகள் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.

19-ம் தேதி ஆயுதபூஜை, 20-ம் தேதி விஜயதசமியையொட்டி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு கூடுதலாக 6,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும். நாளை மறுநாள் (15-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களுக்கான பேருந்துகள் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. பண்டிகை நாட்களில் கிளாம்பாக்கம் செல்வதே சிரமமாக இருக்கும் நிலையில், சென்னை நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலுள்ள மறைமலைநகர் வரை செல்ல வேண்டியிருப்பது டெல்டா மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் சுமையாகும். போக்குவரத்து நெரிசல், பயண நேரம், செலவு ஆகியவை பயண சிரமத்தை மேலும் அதிகரிக்கலாம். கோயம்பேட்டிலிருந்தும் டெல்டா மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.