தூத்துக்குடி குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் வாகனத்தில் அலைகழிக்கும் போலீஸ் - பின்னணி என்ன?
தூத்துக்குடி பனிரெண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காவல்துறையினர் ராஜபாண்டி நகர் பகுதியில் குற்றவாளி வசித்த விட்டுக்கு குற்றவாளி தர்ம முனீஸ்வரனை அழைத்துச் சென்ற காவல்துறை பின்னர் குற்றவாளியை தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் வசித்து வந்த குற்றவாளி தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து குளத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து கொளத்தூரில் இருந்து மூன்று வாகனங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை அவர் வசித்த ராஜபாண்டி நகர் வீட்டிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலை வழியாக காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்கின்றனர். சாலை வழியாக காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்கின்றனர்.
குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே தர்ம முனீஸ்வரன் தான் தங்கி இருந்த ராஜபாண்டி நகர் பகுதியில் பெண்கள் ஒதுங்கும் பகுதியை நோட்டமிட்டு இதேபோல் பெண்கள் ஒதுங்குவதை பார்த்து அடிவாங்கி உள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.