"கல்வி கற்க கூடாது-னு நினைக்கிறாங்க..!"- இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா
நம்மை படிக்கவே விடக்கூடாது என்று முட்டுக்கட்டைகள் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அதை உடைப்பது தான் திராவிடம் என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, “நம்மை படிக்கவே விடக்கூடாது என்று முட்டுக்கட்டைகள் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அதை உடைப்பது தான் திராவிடம். ஆரிய கருத்தியலில் சிலருக்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்வியை யாராலும் அழிக்க முடியாது. புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து, நமது கல்வியை ஒன்றிய அரசு தடுக்க பார்க்குறாங்க. முன்பு கட்டை விரலைக் கேட்ட மாதிரி, கர்ணனுக்கு மறதியை கொடுத்த மாதிரி, இப்போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்து நாம் படிப்பதை தடுக்க பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்னு சொல்வோருக்கு, நமக்கு நியாமாக வரவேண்டிய ரூ.2,150 கோடி பணத்தை தரமாட்டேன்னு சொல்றாங்க. இப்படி துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் இன்றைய வடிவம்தான் புதிய கல்விக் கொள்கை” என்றார்.