☰
×

இதற்காக தான் வெளிநாட்டுக்கு போனார் முதல்வர்..!– செங்கல்பட்டு மேடையில் அதிரடி கிளப்பிய இபிஎஸ்!

 

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

 அதிமுகவின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை போல், இந்த தவெக ஆட்சியில் 6 மாதங்களில் கொண்டு வரப்பட்டதா? பிரேக் இல்லாத வண்டி போல ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. முதல்வர் அண்மையில் வெளிநாடு சென்றார், அவர் எதற்காக சென்றார் என உங்களுக்கே தெரியும்.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் செய்திகளில் வேறு போட்டோக்கள் தான் வந்தன. இவரா நாட்டு மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்.

நடிகர் ரேஸர் ஒருவர் அரசியலுக்கு வருவார் என தெரிந்தவுடன், தனக்கும் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை பார்க்க சென்றுவிட்டார் முதல்வர். அவர் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவோ, முதலீடுகளை ஈர்க்கவோ வெளிநாடு போகவில்லை.மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தின் போது 5 நிமிடங்கள் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவோம் என்று பேசினார். ஆனால் 2 நாட்களாக அவரை ஓட, ஓட விரட்டினோமா, இல்லையா?

முதல்முறை பிரசாரம் செய்தார். பின்னர் 2வது முறை வீதி, வீதியாக வந்தார்.அவரின் முகத்தை காட்டினாலே போதும் என்று அமைச்சர்கள் கூறினர். அவர் முகத்தை மட்டும் காட்டவில்லை, ஆடு மேய்த்தார், டிராக்டர் ஓட்டினார். முருங்கைக்காய் பறித்தார், டீ குடித்தார்.டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து தான் வெற்றி பெற்றனர் என்று அவர்களின் கூட்டணிக் கட்சிகளே கூறுகின்றன. மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டுகளை பெறாத கட்சி தவெக.

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.