×

இதனால் தான் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை - எம்.பி.கனிமொழி அட்டாக்!

 

சோளிங்கர் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய எம்.பி.கனிமொழி,

தமிழக முதல்வர் கடந்த தேர்தலின் போது சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு தற்போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் கலைஞர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் உரிமைத் தொகையை வழங்க வாய்ப்பே இல்லை என்று கூறினர். ஆனாலும் வெற்றிகரமாக 1.31 கோடி மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றவுடன் கலைஞர் மகளிர் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதல்வர் ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் என்ற மகத்தான தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார். அதன்படி பெண்கள் தங்களுக்கு தேவையான ஃப்ரிட்ஜ், மிக்ஸி,கிரைண்டர், வாஷிங் மெஷின் என தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஊக்கத்தொகை, 1500 ஆக உயர்த்தி வழஙப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு ரூ.1500 வழங்கப்படும். மகளிர் விடியல் பயணத்தை உருவாக்கி தந்த அரசு நம் திமுக அரசு.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைக்கின்றது. ஆனால் அதனை அதிமுக எதிர்க்கவில்லை. மாறாக அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. நமக்கு எதிராக உள்ள பாஜக கூட்டணி தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் அணி, இந்திய மக்களுக்கு எதிரான அணியாகும். பிரதமர் மோடி மேக்-இன் இந்தியா என்று சொல்கிறார், ஆனால் அம்பானி அதனையைத் தவிர வேறு எதையும் மேக்-இன் செய்யவில்லை. பிரதமர் மோடியை கண்டால் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்.

ஆனால் பிரதமரோ அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து பயப்படுகிறார். ஏற்கனவே பணம் பதிவு இழப்பு நடவடிக்கை மூலம் பணத்திற்காக வரிசையில் நின்றோம், என்று கேஸுக்காக வரிசையில் நிற்கும் அவல நிலையில் உள்ளோம். வாட்ஸ் ஆப்-யுனிவர்சிட்டி என்ற பெயரில் நாள்தோறும் தங்களுக்கு தோன்றும் பொய்களை பாஜக அரசு சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கின்றனர். ஆனால் உண்மையில் தமிழகத்தில் குற்றம் விழித்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டு ரூ.100 ரூபாய் வரிகட்டினால் மத்திய அரசு ரூ.29 மட்டுமே திரும்ப வழங்குகிறது. ஆனால்
உத்திர பிரதேசத்துக்கு ரூ.333ம்,மத்திய பிரதேசத்துக்கு ரூ.279ம், பீஹார் மாநிலத்துக்கு ரூ.922ம் மத்திய அரசு வழங்குகிறது. இது தான் மத்திய அரசு தமிழகத்திற்கு இழைக்கும் ஓரவஞ்சனை என பேசினார்.இந்த பகுதியில் 61,320 பேர் கலைஞர் உரிமைதொகை மூலம் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் மூலம் 10,000 பேர் பயன்பெறுகின்றனர். இந்த திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

பனப்பாக்கம் சிப்காட்டில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம். 4 முக்கிய ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் அதிகளவில் வேலைக்கு செல்வதால் அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்து கொள்ள காப்பகங்கள் உருவாக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு, நெல் பாதுகாக்க வசதியாக தானிய கிடங்குகள் அமைக்கப்படும். 24*7 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனையை அமைத்து தருவோம் என கூறி வாக்கு சேகரித்தார்.