×

தங்கம் வாங்க இது தான் சரியான டைம்..ஒரே நாளில் ரூ.2,360 சரிந்த தங்கம் விலை.!

 

2025ஆம் ஆண்டு ஜனவரில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57 ஆயிரமாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு பிப்ரவரியில் சவரன் ரூ. 1.20 லட்சத்தை தொட்டது. இதே வேகத்தில் தங்கம் விலை உயரும் பட்சத்தில் இந்த ஆண்டு பாதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 2 லட்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்திருந்தனர்.

ஆனால், இந்த கணிப்புகளை மாற்றியமைக்கும் விதமாக தொடங்கியது அமெரிக்கா - ஈரான் போர். பொதுவாக போர்க்காலங்களில் தங்கம் விலை கூடும். ஆனால் இந்த போரினால் தங்கம் விலை மடமடவென சரிந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கு சென்றது.

கிட்டத்தட்ட 5 மாதங்களாக சொற்ப அளவில் மட்டுமே விலை மாற்றம் இருந்த நிலையில், இந்த மாதம் தொடங்கியதிலிருந்து விலையேற்றம் சூடு பிடித்தது. ஒரு சவரன் மீண்டும் ரூ. 1.20 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, 4 நாட்களில் ரூ. 3,040 குறைந்திருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 28) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.75 உயர்ந்து ரூ.1,18,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.265-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 29) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.