☰
×

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்தது.. இன்றைய நிலவரம்!

 

கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டாலர் மதிப்பு உயரும்போது முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற முதலீடுகளை நோக்கி செல்வதால், சர்வதேச சந்தையில் தங்கம் மதிப்பு இறங்க தொடங்கும். இதனால் தங்கம் விலை சரிவை நோக்கி செல்லும்.

மற்ற நாடுகளை பொருத்தவரை தங்கம் பெரும்பாலும் ஒரு முதலீடாகவே கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தங்கம் ஒரு முக்கிய முதலீடாக மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்து மற்றும் சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால், தங்கம் விலை குறையும்போது சாமானியர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் வாங்கி சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இன்று (நவம்பர் 17) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,280 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.190-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,90,000-க்கும் விற்பனையாகிறது