தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! அதிரடியாகக் குறைந்த விலை - முழு விபரம் உள்ளே..!!
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது.
ஆயுதப்பூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வரவுள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் குறையுமா? இல்லை ஏறுமா? என்ற கேள்வி இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சிக்கல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் மாற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பரில் மட்டும் 23 டன் தங்கம் வாங்கியிருந்ததாகவும், இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 103 டன் தங்கம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவின் மொத்த தங்கம் கையிருப்பு 2,410 டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக, பிரான்ஸ், இத்தாலியை பின்னுக்கு தள்ளி, விரைவில் மூன்றாம் இடத்தை பிடிக்க வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போதைய நிலவரப்படி, அதிகபடியான தங்கம் கையிருப்பு நாடுகளில் 8,133 டன் கையிருப்புடன் அமெரிக்கா முதலிடமும், 3,350 டன் கையிருப்புடன் ஜெர்மனி 2ஆம் இடமும், 2,452 டன் கையிருப்புடன் இத்தாலி 3ஆம் இடமும், 2,437 டன் கையிருப்புடன் பிரான்ஸ் 4ஆம் இடமும் வகிக்கிறது.
உலக நாடுகள் மத்திய வங்கி தங்கம் கையிருப்பு பட்டியலில் இந்தியா 880 டன் தங்கம் கையிருப்புடன் 8வது இடத்தில் இருக்கிறது. எனினும், பொதுமக்களிடையே தங்கம் அதிகம் புழங்குகின்ற நாடுகளில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது.
நேற்று (அக்டோபர் 14) 1 கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
இன்று (அக்டோபர் 15) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து, ரூ.1,08,120-க்கு விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மீண்டும் இன்று விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.