விடியற்காலை 4 மணிக்கே பள்ளி வாசலில் பாய் விரித்து படுத்த பெற்றோர்கள் - காரணம் இது தான்..!
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் எல்கேஜி சீட் வாங்குவதற்காக அதிகாலை முதலே காத்திருந்த பெற்றோர்களின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது ஏர்படுத்தியுள்ளது
நெல்லை பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிற நிலையில் ஏராளமான கல்வி நிலையங்கள் அங்கு செயல்பட்டு வருகிறது.
கல்விக்கு பெயர் போன பாளையங்கோட்டையில் செயல்படும் பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில் சீட் கிடைப்பது மிகவும் பெரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பள்ளியில் எல்கேஜி சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அந்த சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் ஏராளமான பெற்றோர்கள் பள்ளிகளில் முன்பாக குவிந்தனர்.
மேலும் ஒவ்வொருவரும் காலையிலேயே வந்திருந்த காரணத்தினால் நீண்ட நேரம் நிக்க முடியாமல் அங்கேயே இடம் பிடித்து வரிசையாக அமர்ந்திருந்த நிலையும் பார்க்க முடிந்தது.
எல்கேஜி சீட் பெறுவதற்கு பெற்றோர்கள் ஒரு பள்ளி முன்பாக வாசலில் குவிந்திருந்த சம்பவம் பாளையங்கோட்டையில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.