×

தமிழகமே எதிர்பார்த்த அந்த தருணம்..!  இன்று மாலை நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியீடு!..

 

நடிகராக இருந்து தவெகவை தொடங்கிய விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட்டார்.

முதலமைச்சராக பதவியேற்றபோதே தவெக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். அதற்கு முன் முந்தைய திமுக அரசு என்ன செய்திருக்கிறது என்று நாங்கள் பார்க்க வேண்டும்.. 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது.. கஜானாவில் என்ன இருக்கிறது? என்ன இல்லை? என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.. கொஞ்சம் நேரம் கொடுங்கள்.. விரைவில் தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை நாங்கள் வெளியிடுவோம்’ என கூறியிருந்தார்.

ஆனால் அவர் அறிவித்து ஒரு மாதங்களாகியும் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடாமல் இருந்தது. ஒருபக்கம், நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் பல்வேறு ஆலோசைனை கூட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து இன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார்.

துறை சார்ந்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செய்துமுடிக்கப்பட்ட திட்டங்களின் செலவீனம் மற்றும் இழப்பீடு, அதோடு, செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்கள், மாநிலத்திற்கு உள்ள மொத்த கடன், மத்திய அரசிடமிருந்து பெற்ற தொகை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிடவிருக்கிறார். நாளை மாறுநாள் சட்டசபை கூடவுள்ள நிலையில் இன்று மாலை நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியாவது குறிப்பிடத்தக்கது.