×

இது முதல்முறையாக தேசிய கொடியேற்றுகிறார் முதலமைச்சர் விஜய்..! 
 

 

சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 8.45 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தமிழக முதலமைச்சர் விஜய்.

கோட்டை கொத்தளத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் விஜய், தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு சென்று 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதலமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றுகிறார். இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.