தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.3,360 சரிவு..!!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தொடங்கியதும் தங்கம் விலை விறுவிறுவென ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களில் ஏறத்தாழ ரூ. 13 ஆயிரம் குறைந்திருக்கிறது. இதற்கு உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலையும், அது டாலரின் விற்பனையாவதால் டாலர் மதிப்பு உயர்ந்ததுமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் வர்த்தகமானது பெரும்பாலும் அமெரிக்க டாலரில் தான் நடைபெறுகிறது. போர் ஓய்ந்து தற்போது கச்சா எண்ணெய் வரத்து சுமுகமாகி வருவதால், இதுவரை தட்டுப்பாட்டை சந்தித்து வந்த நாடுகள் அதிகளவில் கொள்முதல் செய்ய தொடங்கி இருக்கின்றன. இதனால் தங்கத்தின் மீதான கவனம் திசை திரும்பியிருக்கிறது. எனினும், இந்த நிலைமை சீராகும்போது, தங்கம் விலையானது கணிசமாக ஏறக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அந்த வகையில் சென்னையில் நேற்று(ஜூன் 24) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,350க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,140க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.3,360 சரிந்துள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனையாகிறது.