×

இது சாதாரணமான பிரச்சினை அல்ல, தமிழர்களுக்கான பிரச்சினை - திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்..!!

தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,

“கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கால்நடைகளை தேடிச்சென்றபோது அநியாயமாக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் கழகத் தலைவர். இது மனித உரிமைகள் மீறல். இது ‘Fake என்கவுண்டர்’.

தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல், Fake என்கவுண்டருக்கு நீதி விசாரணை தேவை. இது சாதாரணமான பிரச்சினை அல்ல, தமிழர்களுக்கான பிரச்சினை. இந்த விவகாரத்தில் தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

”தெளிவான நீதி விசாரணை வேண்டும்”.. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ் பாண்டியன் உரை

CMvijay | TNAssembly 2026 | DMK | TVK | JCDprabhakar#NewsTamil24x7 #ManojPandiyan pic.twitter.com/IsszMw9rTW

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 18, 2026