"6 மாதம் கூட இந்த ஆட்சி நிலைக்காது!" – தவெக அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இன்றைக்கு தவெகவிற்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இருக்கிறது. விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவைத்தவிர பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை.குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையைக் காப்பாற்றவே, மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதை நடமாட்டமா? என்பதாகத் தான் இன்றைய தவெக ஆட்சி நடந்து வருகிறது.
மேடைக்கு, மேடை அவர் என்ன கத்துகிறார் என்றால், தீய சக்தி, தீய சக்தி என்று புலம்பி கொண்டு இருக்கிறார். தீயசக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறது. நான் உங்களை எல்லாம் அன்போது கேட்டு கொள்ள விரும்புவது, கேகேஎஸ்ஆர் பேசும் போது சொன்னார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, இன்றைக்கு நாட்டை ஆட்சி செய்யும் அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும். நான் துவக்கத்தில் சொன்னேன். 6 மாதம் என்றேன். ஆனால் 6 மாதம் கூட நிலைக்க முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி போய் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.