☰
×

"இந்த தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல்"- திரிஷா 

 

இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்யப் போகிறேன் என நடிகை திரிஷா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்யப் போகிறேன். ஆதரவின்றி மீட்கப்பட்ட ஒரு நாயின் உணவுச் செலவை ஏற்கப் போகிறேன். வெறும் ₹1,000 இருந்தால், மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு வழங்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முப்பது நாட்களுக்கு வயிறு நிறைய உணவும் மகிழ்ச்சியான தருணங்களும்! இந்தத் தீபாவளிக்கு, நீங்களும் என்னுடன் ஏன் சேரக் கூடாது?

இந்த தீபாவளிக்கு நீங்களும் என்னுடன் இணைந்து ஒரு நாயின் உணவுச் செலவுக்காக ₹1,000 வழங்கலாமே!  ₹1,000-க்கு ஒரு நாயின் உணவுக்கு ஆதரவளித்து, அவற்றின் வாழ்வில் சிறிதளவு மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள். ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நன்கொடை அளியுங்கள். இந்த தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்றுவோம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.