×

பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி! – குமிடிப்பூண்டி அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகைள மீறி சாலையில் சுற்றித் திரிந்த கூலித் தொழிலாளியின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏறாவூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சந்தைக்கு சென்று பைக்கை நிறுத்தியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வெளியே நடமாட தடை உள்ள நிலையில் யாரோ ஒருவர் பைக்கை கொண்டுவந்து பார்க்கிங் செய்திருக்கிறார் என்று
 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகைள மீறி சாலையில் சுற்றித் திரிந்த கூலித் தொழிலாளியின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏறாவூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா.

இவர் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சந்தைக்கு சென்று பைக்கை நிறுத்தியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வெளியே நடமாட தடை உள்ள நிலையில் யாரோ ஒருவர் பைக்கை கொண்டுவந்து பார்க்கிங் செய்திருக்கிறார் என்று கருதி ஆரம்பாக்கம் போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா ஏறாவூர் பஜார் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தார். இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது தன்னுடைய பைக்கை போலீசார் பறிமுதல் செய்த விவகாரத்தை அவர் கூறியுள்ளார். தன்னுடைய பைக் வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன். பைக் கொடுத்துவிட்டு கைது செய்தால் மீண்டும் செல்போன் டவர் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை போலீசார் கொண்டுவந்து கொடுத்தனர். பைக் வந்த மகிழ்ச்சியில் செல்போன் டவரில் இருந்து இறங்கி வந்த ராஜாவை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.