திருப்பரங்குன்றம் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
Dec 4, 2025, 19:41 IST
திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது