×

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

 

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நூறு வருடமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனை ,மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டமன்ற பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என தமிழ்நாடு அரசு செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ளது முருகப்பெருமான் திருக்கோயில் (முதல் படை வீடு). மலையின் நடுப்பகுதியில் தீபத்தூண் (Deepa Thoon / Fire Pillar) எனப்படும் பாரம்பரிய தீப கம்பம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி (Great Trigonometrical Survey of India) நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை (Survey Stone / Marker Stone) நட்டு வைத்தார்கள்.  19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மலை உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர், முந்தைய தீபத்தூணைவிட உயரமான இடத்தில் இருப்பதால், கார்த்திகை தீபம் இங்கே ஏற்றப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.