×

“தயவு செய்து இடமாற்றம் செய்ய வேண்டாம்” காவலருக்காக போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்!

மனிதாபிமானத்தோடு பணியாற்றி வரும் காவல் ஆய்வாளரை, பணியிடமாற்றம் செய்யக்கூடாது என தேனி அருகே மக்கள் போஸ்டர் ஒட்டி கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதனகலா. இவர் மீது அப்பகுதி மக்களுக்கு தனிப்பிரியம் இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் இவர் செய்த உதவிகள் தான். உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு தேடி சென்று உணவளிப்பது, மலையடிவாரத்தில் இருந்து குரங்களுக்கு உணவு கொடுப்பது என மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில்
 

மனிதாபிமானத்தோடு பணியாற்றி வரும் காவல் ஆய்வாளரை, பணியிடமாற்றம் செய்யக்கூடாது என தேனி அருகே மக்கள் போஸ்டர் ஒட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதனகலா. இவர் மீது அப்பகுதி மக்களுக்கு தனிப்பிரியம் இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் இவர் செய்த உதவிகள் தான். உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு தேடி சென்று உணவளிப்பது, மலையடிவாரத்தில் இருந்து குரங்களுக்கு உணவு கொடுப்பது என மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் மதனகலா, தேனி மாவட்டம் போடிக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் திருப்பரங்குன்றம் மார்க்கெட், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவலர் மதனகலாவின் செயலால் அப்பகுதி மக்கள், அவர் மீது கொண்டிருக்கும் அன்பு காண்போரை நெகிழச் செய்துள்ளது.