“புதிய தலைமைச் செயலகம் வேண்டும்! ஆனால்..”- திருமாவளவன்
புதிய தலைமைச்செயலகம் வேண்டும் தான், .ஆனால் பொது மக்கள் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் போராட்டம் செய்ய வேண்டும் என்ற பார்வை மக்களிடம் உள்ளது. ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மக்களுக்கான உரிமை குரலை எழுப்ப வேண்டியது விசிகவின் தவிர்க்க முடியாத கடமை. ஆளுங்கட்சியை விமர்சிக்க மட்டும் நாம் இங்கு கூட வில்லை. மீனவ சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன், பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கருத்தை அறியாமல் இப்படி ஒரு முடிவை அரசு எடுக்க வாய்ப்பில்லை, எடுக்காது என நம்புகிறோம். அதிகாரிகளை அணுகி கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒரு வழி, போராட்டம் தான் மக்களை அரசியல்படுத்தும் முறை" என்றார்.