×

"சீமானோடு கொஞ்சிக் குலாவுகிறார்கள்! திருமாவளவன் எதிரியாகிவிட்டேனாம்"- திருமாவளவன்

 

கலைஞருக்கு பேனா சின்னம் வைத்தால் நானே உடைப்பேன் என்று சொன்னவரோடு கொஞ்சி குலாவுகிறார்கள்.. பொது வேட்பாளராக நிறுத்தப் போகிறார்கள்.. திருமாவளவன் எதிரி ஆகிவிட்டானாம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கலைஞருக்கு பேனா சின்னம் வைத்தால் நானே உடைப்பேன் என்று சொன்னவரோடு கொஞ்சி குலாவுகிறார்கள்... பொது வேட்பாளராக நிறுத்தப் போகிறார்களாம். திருமாவளவன் எதிரியாகிவிட்டேனாம். 2009 ஆம் ஆண்டிலிருந்து திமுக கூட்டணியை பாதுகாத்தவன் இந்த திருமாவளவன். கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமாக தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளைத் தந்திருந்தால், இவ்வளவு பெரிய பின்னடைவைச் சந்திருக்க வாய்ப்பு இல்லை. எப்படியாவது விசிகவை கூறுபோட்டுவிட வேண்டும் என தூக்கத்தை இழந்த கும்பல். விசிகவுடன் உறவு வேண்டாம் என்ற நோக்கிலும், விசிகவை எங்களால் பலவீனப்படுத்த முடியும் என்ற எண்ணத்திலும்தான் விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். நம்முடைய ஆசையை பின்னுக்கு தள்ளி கூட்டணி தலைவரின் உள்ளம் நோகக் கூடாது என்ற அடிப்படையில் காட்டுமன்னார் கோவிலில் நிற்கக் கூடாது என்ற முடிவெடுத்தேன். ஆனால், இன்றைக்கு விடுதலை சிறுத்தைகளை திமுகவுக்கு எதிராகவும், தவெகவுக்கு எதிராகவும் நிறுத்தப் பார்க்கிறார்கள்” என்றார்.