×

மின் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்க- திருமாவளவன்

 

ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரே 30 லட்ச ரூபாய் மதிப்பின் புதுப்பிக்கப்பட்ட சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலையை விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன் எம்பி, “புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு அன்று அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. அண்ணல் அம்பேத்கர் பெரியார் காட்டிய சமூக நீதி சமத்துவம் என்ற கொள்கையின்படி இயங்கக்கூடிய அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இயங்குகிறது என்றார். மேலும் வருகிற செப்டம்பர் 28ம் தேதி மதுரையிலும் அக்டோபர் 8ம் தேதி  கோவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற தலைப்பில் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மணிவிழா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணை வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் முன்மொழிகிறோம் தமிழக மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீண்ட நெடிய விளக்கம் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் மறு பரிசீலனை செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் நடைபயணம் நல்ல முயற்சி. மக்களை ஜாதியின் பேராலும் மதத்தின் பேராலும் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாரதிய ஜனதா மற்றும் சன்பரிவா அமைப்புகள் குறித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தற்கான அரசியல் பயணம்”என்றார்