☰
×

தவெக ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பே இல்லை- திருமாவளவன்

 

அரசியலுக்கும் ஆட்சிக்கும் தவெக புதிது என்றாலும் கூட நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார்கள் என்ற நன்மதிப்பு வந்து கொண்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தவெக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பது புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் தவெக கொடிகளும் பறந்தன. மின்வெட்டு விவகாரத்தில் இனியும் அலட்சியம் வேண்டாம்! முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும்.  தவெகவுக்கான ஆதரவை திரும்ப பெற போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம், அதனால் ஆட்சியை கவிழ்க்க  வாய்ப்பில்லை. அரசியலுக்கும் ஆட்சிக்கும் தவெக புதிது என்றாலும் கூட
நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார்கள் என்ற நன்மதிப்பு வந்து கொண்டிருக்கிறது. விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தவெக-வுக்கு வழங்கும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை. கூட்டணிக் கட்சிகள் தங்களின் ஆதரவைத் தொடரும் நிலையில், தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. 

பெண்களுக்கான வெற்றிப் பயணத் திட்டம் வரவேற்கப்படும் அதே நேரத்தில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வந்த பிறகு அதனைப் பயன்படுத்தி 'வாக்கு திருட்டு' மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்த உண்மை தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் ஓரிரு நாட்கள் சுங்க கட்டண வசூலை கைவிட வேண்டும்" என்றார்.