☰
×

“சார் Fire சார்.. மிரட்டிட்டீங்க சார் என விஜய் என்னை பாராட்டினார்”- திருமாவளவன்

 

தமிழர்களின் ஆளுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் என்பது தெலுங்கர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதாக மட்டுமே இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சாதி அடிப்படையில் ஒருவரை வெறுத்துப் பேசுவது தவறு என்று சொல்வதைப் போலவே, மொழி மற்றும் இன அடிப்படையில் வெறுப்பதும் தவறு என்றுதான் விசிக பேசும் தமிழ்த் தேசியம் கூறுகிறது. தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நீங்கள் குறைக்க வேண்டுமென்றால், தமிழர்களின் எழுச்சியை நிலைநிறுத்த வேண்டும்; தமிழர்களின் ஆளுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் என்பது தெலுங்கர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதாக மட்டுமே இருக்கிறது.


விஜய் அரசியலுக்கு வந்த பிறகு 'சிறுத்தைகள்' எல்லாம் அவர் பக்கம் சென்றுவிட்டதாக சிலர் பேசினார்கள். ஆனால், உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்தில், முதல்வரே என்னை தொடர்புகொண்டு ‘சார் Fire சார்.. மிரட்டிட்டீங்க சார்’ என பாராட்டினார். எந்த விஜய்யை வைத்து என்னை உளவியல் ரீதியாக சோர்ந்து போக வைக்க நினைத்தீர்களோ, அதே விஜய்.. தனித்து நின்று 108 இடங்களை வென்ற விஜய்.. செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கானோரை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட விஜய்.. உளுந்தூர்பேட்டை மாநாட்டை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டும் அளவுக்கு விசிகவினர் என்னுடன் இருக்கின்றனர்” என்றார்.