×

செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ்- திருமாவளவன்

 

செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர் அவர் விலகியது அதிமுகவிற்கு பின்னடைவு, அதிமுகவை பிளவுபடுத்த பாஜக செயலின் எதிரொலி தான் செங்கோட்டையன் விலகல் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோட்டையன் அவர்கள் அதிமுகவின் மூத்த தலைவர் அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவர் வெளியேறும் நிலை அதிமுகவில் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு இது பின்னடைவாக தான் இருக்கும். தனிப்பட்ட முறையில் செங்கோட்டையில் இந்த முடிவை எடுத்திருந்தால் எந்த கருத்தும் சொல்லத் தேவையில்லை. ஆனால் இதன் பின்னணியில் பாஜக ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளில் கைகளும் நீண்டிருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அவர் பாஜகவினார் சந்தித்து அழைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்த கருத்தை நான் தொடக்கத்திலிருந்து ஒரு பயணத்தை பதிவு செய்து வருகிறேன். அதிமுகவை பலவீனப்படுத்துவதை சதித்திட்டமாக பாஜக செயல்படுத்துகிறது. அது அதிமுகவுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதில்லை. அதிமுக தலைமை இதுதொடர்பாக தீவிரமாக சிந்திக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஆளுநர் திரும்பத் திரும்ப தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகளை வைத்து அரசியல் முரண்பாடுகளை வளர்க்கிறார். அவரை திரும்ப பெற வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். ஆனால் அவரை பயன்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது வருத்தமளிக்கிறது.  சுதந்திரப் போராட்ட தியாகி பொல்லான் அவர்களின் நினைவு மணிமண்ண்டபத்தை முதல்வர் திறந்து வைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.