தமிழிசை கருத்து என்னை புண்படுத்தாதா? - திருமாவளவன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை மீது மிகுந்த மதிப்பு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. அவரது விமர்சனத்தால் என் மனம் புண்படாதா? என் கருத்து தமிழிசையை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபம் சென்றேன். குற்றா உணர்வில் திரும்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரி?
பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். பட்டியல் சமூக மக்கள் குறித்த ஆளுநரின் கரிசனத்திற்கு நன்றி. அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளதா, குறைந்துள்ளதா? என்பதை அவர் பேச வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நலம் குறித்து அண்மையில் அவரது அருமை மகள் ஐஸ்வர்யா அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். முழு நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ள அவர் இன்று தொடர்பு கொண்டார். பெரு மகிழ்ச்சி. அவர் நீடுழி வாழ எனது வாழ்த்துகள்” என்றார்.