மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு திருமாவளவன் நேரில் அஞ்சலி..!
Jun 27, 2026, 12:26 IST
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், பாக்யராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதே போல் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டின், திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன் நாகநாதன், இயக்குநர் மற்றும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
#JustNow || பாக்யராஜ் உடலுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் அஞ்சலி #Chennai | #Actor | #Bhagyaraj | #RIP | #PolimerNews pic.twitter.com/7olC2EZzMg
— Polimer News (@polimernews) June 27, 2026