கி.வீரமணிக்கு திருமா நேரில் வாழ்த்து
Aug 4, 2023, 12:06 IST
தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கி .வீரமணிக்கு திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. "தகைசால் தமிழர்"விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி. வீரமணிக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.