தவெக தலைவர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்..!
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்படும் சூழலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கையான கூட்டாட்சி நிர்வாக முறை மற்றும் தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதை விசிக வரவேற்கிறது. இந்தியா -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் தலையீடு செய்து, தமிழர்களுக்கான இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு இந்த தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றார்.
மேலும் பேசிய அவர், "சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை (SIR) என்பது குடியுரிமையை குறிவைத்து நகர்த்தப்படும் ஒன்று என விசிக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல. குடியுரிமை குறித்த சீராய்வு தான் என்பதை அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் முயற்சி. இதனை முற்றாக கைவிட வேண்டும். SIR நடவடிக்கைக்கு எதிராக விசிக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது," என்றார்.
மேலும், "அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்கிறாரா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும். இனி எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே விசிகவின் நிலைப்பாடு." என்று திருமாவளவன் கூறினார்.