×

திருமா கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்- விசாரணைக்குழு அமைப்பு

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாகனம் மீது இரு சக்கர வாகனத்தில் மோதியதாக கூறி, வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணியை வீச முயன்ற வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி, சென்னை உயர் நீதி​ன்றம் அருகே கடந்த வாரம் சமத்துவ வழக்​கறிஞர்​கள் சார்பில்  ஆர்ப்​பாட்​டம் நடத்தினர். இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த ஸ்கூட்டர் மீது திரு​மாவளவன் சென்ற கார் மோது​வது​போல் சென்​றதாக இருசக்கரவாக​னத்​தில் சென்ற வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, அவரது வாக​னத்தை நிறுத்​தி​விட்​டு, ஏன் இப்​படி காரை அஜாக்​கிரதை​யாக ஓட்டுகிறீர்கள் என கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்​து, இரு தரப்பினருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது.

இதில் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி சிலரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு தரப்பினரும், சம்பந்தப்பட்ட ராஜீவ் காந்தி வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்னொரு தரப்பு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் P.S. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதில், பார் கவுன்சில் வளாகத்தின் முன்பு விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றதாகவும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எனவே பார் கவுன்சில் துணைத் தலைவர் அருணாச்சலம் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்க குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவானது,உரிய விசாரணை நடத்தி இரண்டு வாரத்தில் பார் கவுன்சில் பொதுக்குழுவில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.