×

ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே.. ஏடிஎம்க்கு ட்ரிலி மிஷினோடு வந்த திருடர்கள் ஏமாற்றம்

 

வேடசந்தூர் அருகே ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முக்காடு போட்டுக்கொண்டு கட்டிங் மிஷினோடு வந்த திருடர்கள், நீண்ட நேரமாக போராடியும் மிஷினை அறுக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இதில் பணி புரியும் தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக வடமதுரையில் செயல்படும் தனியார் வங்கியின் ஏ.டி.எம் அறை மூனாண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் முகத்தில் துணியை சுற்றியபடி வந்த மர்ம நபர்கள், 2 பேர் ட்ரிலிங் மிஷினைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் இயந்திரத்தை அறுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக பார்த்த வங்கி மேலிட அதிகாரிகள் இது குறித்து வடமதுரை வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர்.