×

தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணிடம் 10 சவரன் நகையை பறித்து சென்ற திருடன்

 

சென்னை சவுகார்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி பத்து சவரன் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவை சேர்ந்தவர் தீபா ஜெயின் (வயது 29). கோயிலுக்கு சென்று விட்டு தாதா முத்தியப்பன் தெரு வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது இரண்டு நபர்கள் நைசாக பேச்சுக் கொடுத்து உங்களுக்கு தோஷம் உள்ளது. அதை நிவர்த்தி் செய்கிறோம் எனக் கூறி ஏதோ மந்திரங்கள் சொல்லியுள்ளனர். உங்கள் தங்க வளையல்களை கழற்றி இந்த பேப்பரில் வையுங்கள் என, அவரது முகம் நோக்கி பேப்பர் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது தீபா ஜெயினுக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு்  நபர்களும் 10 சவரன் வளையல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து தீபா ஜெயின், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்..