☰
×

“எனக்கு ரூ.25 கோடி பேசினார்கள்..”- தவெக எம்எல்ஏ செல்வம்

 

நான் டெண்டரில பணம் வாங்கிட்டேன்னு சொல்றாங்க.அதெல்லாம்  உண்மை இல்லை என தவெக எம்எல்ஏ செல்வம் கூறியுள்ளார்.


விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. செல்வம். இவர் விருதுநகர் கிழக்கு மாவட்டக் தவெக செயலாளர் ஆவார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பாகப் போட்டியிட்ட பா. செல்வம் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக (DMDK) வேட்பாளர் விஜய பிரபாகரனை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக எம்எல்ஏ செல்வம், “நகராட்சி ஒப்பந்தத்தில் எனக்கு கமிஷன் வருவதாகக் கூறப்பட்டது பொய்யானது. நான் வென்றதும் சிலர் ரூ.25 கோடி தருவதாகக் கூறினார்கள். எனக்கு இந்த பதவியைக் கொடுத்தது அண்ணன் விஜய். ரூ.25 கோடி அல்ல, ரூ.250 கோடி கொடுத்தாலும் அண்ணன் விஜய் சொல்வதைத்தான் செய்வேன். ராஜினாமா செய்துவிட்டு வா என்றாலும் செல்வேன். நான் டெண்டரில பணம் வாங்கிட்டேன்னு சொல்றாங்க.அதெல்லாம்  உண்மை இல்லை”என்றார்.