×

புதுசு புதுசா யோசிக்கிறாங்க..!கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் செய்தி அனுப்பி புது மோசடி..! 

 

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டது. 

இதனால், நம் நாடு உட்பட உலக நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் முழுதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை வழங்கும் மஹாநகர் காஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சமீபத்தில் மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

அந்த நிறுவனத்தின் பெயரில் போலி எஸ்.எம்.எஸ்., அக்கும்பல் அனுப்பியுள்ளது. அதில், 'நிலுவையில் உள்ள கட்டணத்தை உடனே செலுத்துங்கள். அவ்வாறு செலுத்தவில்லை எனில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும்' என குறிப்பிட்டதுடன், கட்டணத்தை செலுத்த ஒரு லிங்க் இணைக்கப்பட்டது.அந்த லிங்கை அழுத்திய நபர்களின் மொபைல்போன் மூலம் அவர்களின் வங்கி கணக்குகளுக்குள் ஊடுருவி, அவர்களின் பணத்தை சுருட்டியுள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.7 கோடி ரூபாயை இந்த மோசடி கும்பலிடம் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர். இதேபோல் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களிடமும் அக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.