×

ஆட்சியை கவிழ்ப்போம் என சவால் விடுகின்றனர்... எதிர்கொள்ள நாங்கள் தயார் : அமைச்சர் ஸ்ரீநாத் சூளுரை..!

 

மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அளித்த பேட்டி:

தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது முதல்வர் விஜயின் கனவு. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அரசும், அதிகாரிகளும் பார்த்துக் கொள்வர் என விட்டு விடக்கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் போதை கலாசாரத்தை தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவசியம். நண்பர்கள், உறவினர் என நம்மை சுற்றியுள்ளவர்களை, நாம் சரியாக வழி நடத்த வேண்டும்.

நாம் அனைவரும் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், போதை இல்லாத நாட்டை உருவாக்க முடியும். தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரம், கண்டிப்பாக அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை; சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆறு மாதங்களில் ஆட்சியை கவிழ்ப்போம் என சவால் விடுகின்றனர்; அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.