☰
×

தேவர் ஜெயந்தி- ராமநாதபுரத்தில் டிஜிபி ஆய்வு 

 

 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்படவுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளை தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டார்.

தமிழகத்தின் முக்கிய நிகழ்வான முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தேவர் குருபூஜை நிகழ்வில் விஜய் கலந்து கொள்வதால், இந்த நிகழ்வுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்படவுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளை தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த டி.ஐ.ஜி.க்கள், 40 எஸ்.பி.க்கள் மற்றும் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.