×

இன்னும் வாய்ப்பு இருக்கு! மருத்துவ மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது.

இதில், தகுதியான மாணவர்கள், கடந்த 19ம் தேதி வரை கல்லுாரிகளை தேர்வு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்பின் கூடுதலாக, ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தற்போது, இரண்டாம் முறையாக, வரும் 24ம் தேதி மாலை 5:00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இடங்கள் பெற்றவர்கள் விபரம், 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள், இன்னும் வெளியாகாததால், மாநில கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் தேர்வு குழு தெரிவித்துள்ளது.