×

இன்று ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஜெப்டோ டெலிவரிகள் கிடையாது..!

 

டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதல் ஆங்காங்கே கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கும். அந்த நாள் முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பலர் ஆர்டர் செய்து உணவுகளை உண்டு மகிழ்வார்கள். குடும்பத்தினருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் வெளியில் இருந்து உணவை வாங்கி உண்பார்கள். அதிலும் பக்கெட் பிரியாணி, சிக்கன் 65, தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகள் அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்படும். சைவம் சாப்பிடுவோர் முந்திரி பிரியாணி, குங்குமப்பூ பிரியாணி, ஹைரதாபாத் பிரியாணி, வெஜ் பிரியாணி, பன்னீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை ஆர்டர் செய்து மகிழ்வார்கள்.

 

இந்நிலையில், ஸ்விக்கி, ஜொமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் வேலைச்சூழல் மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக டிசம்பர் 31 ஆம் தேதி போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

புத்தாண்டு போன்று நிகழ்வுகளில் பணிச்சுமை பல மடங்கு அதிகரிப்பதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படையான, நியாயமான ஊதிய முறை, 10 நிமிட டெலிவரி போன்ற ஆபத்தான நடைமுறைகளை ரத்து செய்தல், காரணமில்லாத ஐடி பிளாக் செய்தல், அபராத விதிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.