பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது- இந்தியன் ஆயில் நிறுவனம்
Mar 12, 2026, 18:48 IST
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் தொடர்ந்து திறந்திருக்கும், வழக்கம்போல் செயல்படும். பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும், விநியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.