×

பரந்தூரில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை- ஜி ஸ்கொயர்

 

பரந்தூரில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் பதிலளித்துள்ளார்.


பரந்தூர் பகுதிக்கு மிக அருகில் (சுமார் 20 முதல் 30 நிமிட பயணத் தொலைவில்) ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜி ஸ்கொயர் (G Square) நிறுவனத்தின் பல பிரசித்தி பெற்ற வீட்டு மனை திட்டங்கள் அமைந்துள்ளன. நேரடியாகப் பரந்தூர் கிராமத்திற்குள் தற்போதைக்குத் திட்டங்கள் இல்லை என்றாலும், வரவிருக்கும் பரந்தூர் விமான நிலையப் பகுதியைக் குறிவைத்து அதன் மிக அருகாமையிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் பல முக்கியத் திட்டங்களை ஜி ஸ்கொயர் Housing நிறுவனம் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு பரந்தூரில் 900 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல். அதுமட்டுமல்லாமல், எனக்கோ, எனது பிள்ளைக்கோ அல்லது எனது உறவினர்களுக்கோ பரந்தூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. கடந்த சில நாட்களாக சட்டமன்றத்தில் எங்கள் நிறுவனம் குறித்து ஆதாரமின்றி சில தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதாரம் கேட்டு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் சபரீசனுக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம் அளித்துள்ளார்.