தமிழகத்திற்கு தண்ணீர் திறப்புக்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை- கர்நாடகா
Jul 22, 2026, 17:01 IST
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கூறியுள்ளது.
டெல்லியில் காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடகா தரப்பில் யாரும் நேரடியாக பங்கேற்கவில்லை. தமிழகம் சார்பில் அதிகாரிகள் சத்யபிரதா சாகு, சுப்பிரமணியன் பங்கேற்றனர். கர்நாடகா சார்பில் கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி மூலம் பங்கேற்றனர். அப்போது கர்நாடக அணைகளில் தற்போது நீர்வரத்து இல்லை. ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தற்போதைக்கு வாய்ப்பில்லை என கர்நாடகா கூறியது. ஏற்கனவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு என்பது இன்னும் செய்யப்படாமல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இதனால் ஏற்பட்டுள்ளது.